Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிறைவடைந்த வழக்குகளின் சான்றுப் பொருள்கள் அழிப்பு

In இலங்கை
Updated: 10:38 GMT, May 17, 2018 | Published: 08:09 GMT, May 17, 2018 |
0 Comments
1047
This post was written by : Yuganthini

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில்  நிறைவடைந்த வழக்குகளின் சான்றுப் பொருள்கள்  தீயிட்டு இன்று (வியாழக்கிழமை) அழிக்கப்பட்டன.

2016ஆண்டு நிறைவடைந்த போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, வன்புணர்வு உள்ளிட்ட 15 வழக்குகளின் சான்றுப் பொருள்கள் இவ்வாறு அழிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் உத்தரவில், நீதிமன்ற வளாகத்துக்கு முனபாகவுள்ள அரச காணியிலேயே குறித்த சான்றுப் பொருட்கள் தீயிடப்பட்டன.

இந்த சான்றுப் பொருள்களில் சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 27 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள்களும் உள்ளடங்குகின்றன.

இதேவேளை, சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் கடந்த நவம்பர் 23ஆம் திகதி நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையுள்ள அரச காணியில் தீயிட்டு அழிக்கப்பட்டன. அவையும்  நீதிபதி மா.இளஞ்செழியனின் உத்தரவின் பேரிலேயே அழிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)