Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கொரியாவின் தகவலில் உண்மையில்லை: வடகொரியா

In உலகம்
Updated: 08:58 GMT, May 17, 2018 | Published: 08:58 GMT, May 17, 2018 |
0 Comments
1099
This post was written by : Johnson paiva

தென்கொரியா தெரிவித்திருக்கும் தகவலில் உண்மையில்லை என வடகொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரத்துசெய்யப்பட்ட பேச்சுவார்த்தையினை திரும்பவும் நடத்துவதற்கு வடகொரிய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசியதாகத் தென்கொரிய ஜனாதிபதி மாளிகையின் ஊடகப்பேச்சாளர் இன்று (வியாழக்கிழமை) காலையில் தெரிவித்திருந்தநிலையில் கிம் ஜொங் உன் மற்றும் மூன் ஜேன் இன் இடையில் எந்தவிதமான தொலைபேசி உரையாடல்களும் நிகழவில்லை என வடகொரிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

தென்-வட கொரியாக்களுக்கிடையில் பியங்யோங்கில் நேற்று பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவிருந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு ஆரம்பித்த தென்கொரிய அமெரிக்க கூட்டு இராணுவப்பயிச்சியில் பலதரப்பட்ட போர்விமானங்கள் யுத்த ஒத்திகை பார்க்கப்படுவதனை காரணம் காட்டி குறித்த பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டதோடு கிம் ஜொங் உன் அமெரிக்க ஜனாதிபதியை சிங்கப்பூரில் சந்திப்பது குறித்து வடகொரியாவின் முதல் துணை வெளிவிகார அமைச்சர் Kim Kye Gwan சந்தேகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)