Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல் ஆமைகளை வைத்திருந்த சந்தேகநபர் கைது

In இலங்கை
Updated: 10:42 GMT, May 17, 2018 | Published: 08:37 GMT, May 17, 2018 |
0 Comments
1056
This post was written by : Yuganthini

புத்தளம்,முதலைக்குளி பகுதியிலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் கல் ஆமைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை ஆனமடு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆனமடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (புதன்கிழமை) சந்தேகநபரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து நான்கு கல் ஆமைகளையும் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டில் இடம்பெறவிருந்த விருந்து வைபவத்திற்கு பயன்படுத்துவதற்காக குறித்த கல் ஆமைகளைக் கொண்டு வந்து கிணற்றினுள் மறைத்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் மீட்கப்பட்ட கல் ஆமைகளையும் ஆனமடு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த ஆனமடு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)