Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹரி – மேகன் ஜோடிக்கு ஹொலிவூட் நட்சத்திரங்கள் வாழ்த்து!

In
Updated: 09:19 GMT, May 17, 2018 | Published: 09:19 GMT, May 17, 2018 |
0 Comments
1095
This post was written by : Varothayan

கேன்ஸ் திரைப்பட விழா தற்சமயம் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால், அதில் கலந்து கொண்டிருக்கும் பல ஹொலிவூட் நட்சத்திரங்கள் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கிலுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, அமெரிக்கத் திரைப்பிரபலங்களும், பிரித்தானியத் திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

நடிகை நயோமி ஹரீஸ் குறிப்பிடுகையில், தான் மேகன் மார்கிலின் தீவிர விசிறி என்றார். அத்துடன், இளவரசர் ஹரிக்கு பொருத்தமான ஜோடி மேகன் எனவும் தெரிவித்தார்.

நடிகர் டிவைன் ஜோன்சன் குறிப்பிடுகையில், நடிகை நயோமி குறிப்பிட்டதை வழிமொழிந்ததுடன், தான் சிறுவயதாக இருந்தபோது, இளவரசர் சார்ள்ஸ் மற்றும் டயனாவின் திருமணத்தை தொலைக்காட்சி ஊடாக பார்த்து ரசித்ததாகவும் குறிப்பிட்டார்.

பிரித்தானிய நடிகை பெலிசிட்டி ஜோன்ஸ் குறிப்பிடுகையில், இங்கிலாந்து மிகச்சிறந்த இளவரசியைப் பெற்றுள்ளதாக மேகன் குறித்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சாமுவேல் எல் ஜக்சன் குறிப்பிடுகையில், தான் இளவரசர் ஹரியை நன்கு அறிந்தவர் எனவும், அவருடனும் இளவரசர் வில்லியமுடனும் கோல்ப் விளையாடியுள்ளதாகவும், மேகன் சிறந்த துணையாக ஹரிக்கு இருப்பார் என்றும் குறிப்பிட்டார்.

அவென்சர்ஸ் திரைப்படத்தில் நடித்த நடிகர்களான ரொம் ஹொலண்ட் மற்றும் பெனடிக் கம்பேர்பட்ச் ஆகியோரும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

நடிகை மியா பரோ குறிப்பிடுகையில், நாங்கள் முதலாவது அமெரிக்க இளவரசியைப் பெறப்போகின்றோம் என்றார். நான் டயானாவின் திருமணத்தை சிறுவயதில் பார்த்திருக்கின்றேன். தற்போது, அவர் மகனின் திருமணத்தையும் பார்க்கப்போகின்றேன். அவர் திருமணம் செய்யப் போவது அழகான மற்றும் சிறந்த மனதை உடைய ஒரு பெண் என மேகன் மார்கில் குறித்தும் சிலாகித்தார்.

பிரித்தானிய மொடல் அழகி நயோமி கம்பல், நடிகர்களான வூடி ஹரல்சன், தண்டி நிவ்டன், நடிகை எம்மா தொம்சன் உள்ளிட்ட பல ஹொலிவூட் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)