Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹரி-மார்கில் திருமணத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாது: பிரித்தானிய பொலிஸ்

In
Updated: 09:28 GMT, May 17, 2018 | Published: 09:28 GMT, May 17, 2018 |
0 Comments
1193
This post was written by : Johnson paiva

இளவரசர் ஹரி திருமண வைபவத்தில் எந்தவித அசாம்பாவிதங்களும் ஏற்படாது எனவும் திருமண நாள் நெருங்குவதை கருத்தில் கொண்டு வின்சர் கோட்டையில் முன்பை விட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தத் திருமண நிகழ்வில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் எந்தவித அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை எனவும் முன்பை விட அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திருமண நிகழ்வுகளுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஜிம் வீம்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கு இடமான பகுதிகளை பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்தி சோதனை இடுவதாகவும், பொலிஸ் காவலரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வருடத்தில் பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)