Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் – ஒட்டுமொத்த உலகிற்கே சவால் விடுத்த வீரர்கள்

In கிாிக்கட்
Updated: 09:40 GMT, May 17, 2018 | Published: 09:40 GMT, May 17, 2018 |
0 Comments
1391
This post was written by : Puvanes

இலங்கை அணி ஒரு காலகட்டத்தில் ஒட்டுமொத்த உலகிற்கே சவால் விடுத்த முக்கிய, பலம் வாய்ந்த அணியாக காணப்பட்டது. ஆனாலும் அதன் அண்மைக்கால வீழ்ச்சி இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தாலும் இனிவரும் காலங்களில் இலங்கை மீண்டு வரும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதற்கேற்றாப்போல் தோல்விகளில் இருந்து மீண்டுவரும் தீவிர முயற்சிகளில் இலங்கை அணி ஈடுபட்டு வருகின்றது.

இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 10000 ஓட்டங்களையும் கடந்து 100 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ள சாதனை வீரர்களின் பட்டியலில் இலங்கை வீரர்கள் நால்வர் உள்ளடக்கப்பட்டுள்ள விடயம் ரசிகர்கள் மூலம் ஆர்வமாக பகிரப்பட்டு வருகின்றது.

இவ்வாறான சாதனைப்படைத்துள்ள சகலதுறை ஆட்டநாயகர்கள் விபரம் வருமாறு, மொத்தமாக 21032 ஓட்டங்களைக் குவித்து 440 விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ள முன்னாள் ஜாம்பவான் சனத் ஜயசூரிய குறித்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

மேலும், திலகரட்ண தில்ஷான் 17671 ஓட்டங்களையும் குவித்து 154 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அரவிந்தடி சில்வா 15645 ஓட்டங்களுடன் 135 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

அதேபோன்று அஞ்சலோ மெத்தியூஸ் இதுவரை 11076 ஓட்டங்களைக் குவித்துள்ளதோடு 184 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதுதவிர ஜாம்பவான்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் என்றதோர் நீண்ட சாதனை வீரர்களின் பட்டியல் கொண்ட இலங்கை அணி தற்போது அடைந்துள்ள வீழ்ச்சி தொடர்ச்சியல்ல.

தற்போதைய நிலையில் இலங்கை மீண்டுவந்து சாதனைப் படைக்கும், என்பது ரசிகர்களின் நம்பிக்கை. இந்த எதிர்பார்ப்புகள் மேற்கிந்திய தீவுகளுடன் அடுத்து இலங்கை அணி மோதும் போட்டிகளின் மூலம் வெளிப்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)