Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறுவோம் – ரஹானே நம்பிக்கை

In
Updated: 10:57 GMT, May 17, 2018 | Published: 10:57 GMT, May 17, 2018 |
0 Comments
1033
This post was written by : Litharsan

ஐ.பி.எல் போட்டியின் பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான சந்தர்ப்பம் இன்னும் உள்ளதாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைவர் அஜிங்ய ரஹானே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கிரிக்கெட்டில் எப்போது எது வேண்டுமானாலும் நிகழலாம். ஓர் அணியாக நின்று அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டிய அவசியமாகும். நாங்கள் அடுத்து நடைபெறவுள்ள பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவோம்.

நாங்கள் இன்னும் பிளே ஓப் சுற்றுக்கான தகுதியை இழக்கவில்லை. அடுத்த சுற்றுக்கு நுழைவோம் என்ற நம்பிக்கையுள்ளது” என்று தெரிவித்தார்.

பிளே ஓப் சுற்றுக்கு ஏற்கனவே சன்றைசர்ஸ் மற்றும் சென்னை அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், அடுத்த இரண்டு அணிகளுக்காக போட்டியில் கடும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது. எனினும் அடுத்தடுத்து நடைபெறுகின்ற போட்டிகள் கொல்கத்தா, மும்பை, பஞ்சாப், பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)