Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன அழிப்பின் உச்சமே முள்ளிவாய்க்கால்: வரதராஜன் பார்த்தீபன்

In இலங்கை
Updated: 11:17 GMT, May 17, 2018 | Published: 11:13 GMT, May 17, 2018 |
0 Comments
1056
This post was written by : Varatharajan Yuganthini

முள்ளிவாய்க்கால் மண்ணில் கால்பதித்து எமது இனத்தின் உரிமைக்காக உயிர்கொடுத்தவர்களை மனதில் நிறுத்தி பிரார்த்தனை செய்வதோடு, எம்மையும் மனதால் சுயபரிசோதனை செய்து கொள்வோமென, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக பார்த்தீபன் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையின் மூலமாகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“சிங்கள பேரினவாத அரசு, தமிழரின் தாற்பரியமான தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை அடக்குவதற்கு கையாண்ட இன அழிப்பு நடவடிக்கையின் உச்சமே முள்ளிவாய்க்கால் இனவழிப்பு.

முள்ளிவாய்க்கால் தியாக பூமி. தமிழினம் வரலாறாய் நிமிர செய்ய மக்கள் உதிரம் சிந்திய புண்ணிய பூமி.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சுமந்தவர்கள் அந்த அவலத்தில் இரத்தமும் சதையுமாக துயர் சுமந்த சாட்சிகள் இன்றும் அவர்களின் மனதை விட்டு நீங்காமல் காணப்படுகின்றது.

இந்நிலையில் மே 18 ஆம் திகதி 2009 ஆம் ஆண்டு தமிழருக்கு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தந்த அரசுக்கு வாழ்த்தும் ஆசியும் வழங்கி தமிழர்களின் கூக்குரலுக்கு செவிசாய்க்காது இருந்தவர்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சிரமேற்றுக்கொண்டு அனுஷ்டிக்கின்றனர்.

இனவாத சக்திகளுக்கு எடுபிடிகளாக நின்று தமிழினத்தின் உரிமைகளை தாரைவார்க்க துணிந்து செயற்படும் எவரும் முள்ளிவாய்க்கால் மண்ணில் பாதங்களைப் பதித்தால் அந்த மண் அவமதிக்கப்படுவதுடன் அம்மண்ணும் அதனை ஏற்றுக்கொள்ளாது.

அன்று முள்ளிவாய்க்காலில் மக்கள் அழிந்து கொண்டிருக்கும்போது அரசுக்கு கொடிபிடித்துவிட்டு இன்று நினைவுநாளை அனுஷ்டிக்க மக்களை ஒற்றுமையாக அணிதிரளச் சொல்லும் சில தமிழ் அரசியல்வாதிகளின் மனங்களை நினைக்கும் போது வியப்பாக உள்ளது.

முள்ளிவாய்க்கால் மண் அவர் வேண்டாம், இவர் வேண்டாம் என்று எவரையும் ஒதுக்கப்போவது இல்லை. இதனால் எல்லோரும் ஒற்றுமையாக எவ்விதபேதமின்றி முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று கூடுவோம்.

அரசியலை தமிழ்மக்களின் உதிரத்தாலும் கண்ணீராலும் உரமூட்ட முயலக்கூடாது. அவ்வாறு நாம் நடந்தால் வரலாறு எம்மை மன்னிக்கப்போவதில்லை.

இன்னமும் இனவெறி ஆட்சியாளர்களை ஆராதிப்பவர்களாக இருந்து கொண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுநாள் மூலம் தம்மை தமிழ்தேசியவாதிகளாக வேடப்படுத்தி நிற்பவர்கள் யார் என்பதை முள்ளிவாய்க்கால் மண்ணில் தடம் பதிக்கும் நேரத்தில் கூட அவர்களாகவே உணராது விடின் இந்த மக்களும் காலமும் நிச்சயம் அவர்களை அடையாளம் காட்டும்” என வரதராஜன் பார்த்திபன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)