Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உயிரிழந்த உறவுகளுக்காக பேதங்களை மறந்து ஒன்றிணைவோம்: விஜயகலா

In இலங்கை
Updated: 11:24 GMT, May 17, 2018 | Published: 11:24 GMT, May 17, 2018 |
0 Comments
1063
This post was written by : Risha

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த எமது உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பேதமின்றி சகலரும் ஒன்றிணைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ”இறுதி யுத்தத்தின்போது வன்னியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். உயிரிழந்த மக்களை பல வருடங்களாக நினைவுகூர முடியாத நிலை காணப்பட்ட நிலையில், நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து 2015ஆம் ஆண்டு மே மாதம் முதல் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் செய்யக்கூடிய நிலை ஏற்படுத்தப்பட்டது.

இதேபோன்றே கடந்த வருடம் மாவீரர் தின நிகழ்வுகளும் வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதில் தவறேதும் இல்லை என்று அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரத்ன பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார்.

யுத்தத்தில் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது அரசியல், சுயநல பேதங்கள் இன்றி பொதுவான எண்ணத்துடன் நடத்தப்பட வேண்டியது இன்றியமையாததாகும்.

உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு முள்ளிவாய்க்காலில் நினைவுதூபி அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை கடந்த மூன்று வருடங்களாக வலியுறுத்தி வருகின்றேன். அதன்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த புதன்கிழமை சந்தித்து நினைவுதூபி அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கான கடிதத்தினையும் கையளித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)