Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் மனித எச்சங்கள் மீட்பு: இரண்டாவது நாளாக நீதவான் பார்வை

In இலங்கை
Updated: 12:09 GMT, May 17, 2018 | Published: 12:09 GMT, May 17, 2018 |
0 Comments
1117
This post was written by : Risha

மன்னாரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியை இன்று (வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும் மாவட்ட நீதவான் அலெக்ஸ்ராஜா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்துள்ள லங்கா சதோச விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு, அதற்கான புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய கட்டடம் கட்டப்பட்டுவரும் காணியில் நேற்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று காலை மன்னார் மாவட்ட நீதவான் அலெக்ஸ்ராஜா குறித்த இடத்துக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டார். இந்த நிலையில், இன்று காலை இரண்டாவது நாளாகவும் அவர், மனித எச்சங்களை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது களனி பல்கலைக்கழக பேராசிரியர் பத்மதேவா, விசேட சட்ட வைத்திய நிபுனர், சட்டத்தரணிகள், மன்னார் நகர சபையின் தலைவர், விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார், தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச்சபை அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரும் வருகைத் தந்து குறித்த காணியை பார்வையிட்டுள்ளனர்.

மேலும், குறித்த காணியில் தொடர்ந்தும் யார் தலைமையில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது, ஆய்வு செய்கின்ற போது தேவைப்படும் உதவிகளுக்கு எந்தத் திணைக்களங்களை ஆகிய விடயங்கள் தொடர்பாக தீவிரமாக இங்கு ஆராயப்பட்டுள்ளது.

மனித எச்சங்களின் மீட்பையடுத்து மன்னாரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த காணியில் எதிர்வரும் தினங்களில் அகழ்வுப் பணிகள் மற்றும் ஆய்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg