Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ்,ஜேர்மனி மற்றும் பிரித்தானியா: பல்கேரியாவில் பேச்சுவார்த்தை

In ஐரோப்பா
Updated: 12:17 GMT, May 17, 2018 | Published: 12:17 GMT, May 17, 2018 |
0 Comments
1138
This post was written by : Johnson paiva

  ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சுவார்த்தை ஒன்றிற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜேர்மனிய அதிபர் அங்கலோ மெக்கில் மற்றும் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே ஆகியோர் பல்கேரியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

பல்கேரியா, சோபியாவில் இன்று (வியாழக்கிழமை) ஒன்றுகூடியுள்ள ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டுத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்னர் ஆழமான கலந்துரையாடலினை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இந்தப் பேச்சுவார்த்தையின் போது மேற்கு பல்கேரிய உறுப்பினர்களை சந்திக்கவுள்ள நிலையில் Brussels பிராந்தியத்தினை ஐரோப்பியாவிற்கு நெருக்கமாக்குவதற்கும் மேற்கு பல்கேரிய நாடுகளில் சிலவற்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக இணைத்துக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளனர்.

அல்பேனியா, போஸ்னியா-ஹெர்சிகோவினா, கொசோவோ, மாசிடோனியா, மன்டினீக்ரோ மற்றும் செர்பியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதன் மூலம் பல்கேரிய நாடுகள் மீது ரஷ்யா மற்றும் சீனாவின் செல்வாக்கினையும், எதிர்ப்புக்களையும் கட்டுப்படுத்தலாம் என பல்கேரிய நாட்டு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் இதற்கான பேச்சுவார்த்தை இன்று பல்கேரியாவின் சோபியாவின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg