Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் !

In இலங்கை
Updated: 13:07 GMT, May 17, 2018 | Published: 13:07 GMT, May 17, 2018 |
0 Comments
1083
This post was written by : Vithushagan

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினையொட்டி நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்றது.

கடந்த 70வருடங்களாக இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு நீதிவேண்டும் என்ற தலைப்பில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

இதன்கீழ் இன்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,இரா.துரைரெட்னம் உட்பட பிரதேசபையின் தவிசாளர்கள்,உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)