Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யுத்தம் உருவாகுவதற்கு நிறைவேற்று அதிகார முறையே காரணமாகும்: அனுரகுமார திசாநாயக்க

In இலங்கை
Updated: 03:24 GMT, May 18, 2018 | Published: 02:25 GMT, May 18, 2018 |
0 Comments
1113
This post was written by : Varatharajan Yuganthini

நாட்டில் யுத்தம் ஒன்று உருவானதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே காரணமாகும். அதனால் ஜனாதிபதி ஆட்சி முறையை  முற்றாக ஒழிக்க வேண்டுமென, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சிவில் சமூகங்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் மூலம் முன்னெடுக்கப்படும் சர்வதிகார  நகர்வுகளை நிறுத்தி தனி ஒரு இடத்தில் காணப்படும் அதிகாரங்களை பரவலாக வேண்டும்.

அதாவது இன்று அமைச்சரவையில் அதிகார துஷ்பிரயோகம் இடம்பெறுவதற்கு முக்கிய காரணம் அங்கு சர்வதிகாரம் குவிந்து காணப்படுகின்றமையாகும்.

அதேபோன்று 1983 ஆம் ஆண்டு ஜே. ஆர் ஆட்சிக்கு நெருக்கடிகள் தோன்றின. அப்போது இடதுசாரி சக்திகள் முன்னோக்கி பயணித்துக்கொண்டு இருந்தது. ஆகவே அவருக்கு எதிரான நெருக்கடிகளை வேறு திசைக்கு திருப்ப வேண்டிய தேவை ஜே.ஆருக்கு ஏற்பட்டது. இதனால் கறுப்பு ஜூலை கலவரத்தை அரசாங்கம் அரகேற்றியது. இதுவே நாட்டில் யுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அத்துடன் வடக்கில் வாழும் தமிழ்மக்கள் அரசாங்கத்தினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகியது. இதனால் 1981 – 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் ஆயுதங்களை கையில் ஏந்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள்.

இவ்வாறு நாட்டில்  யுத்தம் தோற்றம் பெற்றதற்கும்  வடக்கில் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடாத்த முடியாமல் போனமைக்கும் இந்த  ஜனாதிபதி ஆட்சி முறையே காரணமாகும்.

இதனால் வடக்கின் செயற்பாடுகளை சீர்குழைத்து  யுத்தம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த அரசாங்கம் வடக்கின் அழிவுகளுக்கு பதில் கூறவேண்டும்” என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)