Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆறாத துயரை தந்துள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை: இன்றுடன் ஆண்டுகள் ஒன்பது!

In இலங்கை
Updated: 03:05 GMT, May 18, 2018 | Published: 03:05 GMT, May 18, 2018 |
0 Comments
1124
This post was written by : Risha

தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்காக 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிநாளில் படுகொலை செய்யப்பட்ட, உறவுகளின் 9ஆவது ஆண்டு நினைவஞ்சலி இன்று (வெள்ளிக்கிழமை) அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இலங்கையில் அரசாங்கங்கள் மாற்றமடைந்தும், இதுவரை நீதிக்கிடைக்காத இந்த முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவஞ்சலியானது இந்த முறையும் வடமாகாணசபையின் ஏற்பாட்டில் இடம்பெறுகிறது.

தமிழ் உறவுகள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடமாகாணசபையின் ஏற்பாட்டிலும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களது அனுசரனையிலும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இன்றைய தினம் துக்க நாளாகவும், தமிழினப் படுகொலை நாளாகவும் வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் மூன்று தசாப்தகாலமாக முன்னெடுக்கப்பட்ட ஒரு சரித்திரப் போராட்டத்திற்கு, முள்ளிவாய்க்காலில் சமாதிகட்டுவதற்கு முன்னெடுக்கப்பட்ட நகர்வுகள், மனிதகுலத்திற்கு விரோதமானவை என்பதை யாவரும் அறிவர். இத் துயரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஆண்டுகள் ஒன்பதாகின்ற போதும், அம்மக்களின் வலிகளுக்கு மருந்தோ, துயரத்திற்கு ஆறுதலோ, அநியாயத்திற்கான நீதியோ கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)