Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பின்னடைவுகள் தோல்விகள் அல்ல! வரலாறு திரும்பும்!

In இலங்கை
Updated: 03:23 GMT, May 18, 2018 | Published: 03:17 GMT, May 18, 2018 |
0 Comments
1049
This post was written by : Ravivarman

பின்னடைவுகள் தோல்வி அல்ல, சோர்வடைதலும் செயல்படாமையும் தான் தோல்வியை நிரந்தரமாக்கும் எனவும் பின்னடைவுகள் அனைத்திலிருந்தும் மீண்டெழுந்து புதிய வரலாற்றினை நாம் படைப்போம் என பிரித்தானிய தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் பேரவை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘தம்மை யார் ஆட்சி புரிய வேண்டும் என்பது ஜனநாயகத்தில் மக்களே தீர்மானிக்க வேண்டும். மக்களை மையப்படுத்தியே நாடுகளின் இறைமை வகுக்கப்படுகின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை அடிப்படை உரிமைகளைக் கேட்டு ஜனநாயக வழியில் போராடினார்கள். நீதி வழங்குவதற்குப் பதில் அடக்குமுறை ஏவி விடப்பட்ட போது தவிர்க்க முடியாத கட்டத்திலேயே ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது.

தனது இறையாதிக்கத்துள் வரும் நிலப் பிரதேசத்தினுள் உள்ள மக்கள் மீது படு மோசமான ஆயுத வன்முறையை ஏவி விட்ட சிங்களதேசம், தான் இழைத்த கொடுமைகளை இன்றுவரை மீண்டும் மீண்டும் மறுதலித்து வருகின்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 450 நாட்களாக தொடர்கின்றது, நில மீட்புக்கான போராட்டங்கள் தொடர்கின்றன.

மிலேச்சத்தனமான பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் கைவிடப்பட்டுவிட்டது, தெற்கில் இனவாதம் தன் கோர முகத்தை மீண்டும் வெளிப்படுத்த முனைகின்றது.

இதுவரை இடம்பெற்ற கொடுமைகள் எதிர்காலத்தில் மீள நிகழாமலிருக்க தேவைப்படும் இலங்கையின் கட்டமைப்பு மாற்றங்கள் நடைபெறவில்லை, வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய நீதி விசாரணைக்கான சிறு அசைவு கூட இதுவரை இடம்பெறவில்லை.

முள்ளிவாய்க்கால், தமிழ் இனவழிப்பின் அடையாளம். படுகொலை செய்யப்பட்ட எம் மக்களை நினைவுகூருவதற்கும் அவர்களுக்கான நீதியைக் கோரியும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

உலகெங்கும் நடைபெறும் இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் எம்மக்கள் தொகை, நீதிக்கான எமது வேட்கையை உணர்த்தும் அளவுகோலாகப் பார்க்கப்படுகிறது. எனவே, இந் நிகழ்வுகளில் நாம்பெருந்திரளாகக் கலந்து நீதிக்கான எமது குரலை ஓங்கி ஒலிப்போம்’ எனக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)