Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்டது மாணவர்களின் உந்துருளி பேரணி;!

In இலங்கை
Updated: 03:37 GMT, May 18, 2018 | Published: 03:37 GMT, May 18, 2018 |
0 Comments
1138
This post was written by : Risha

முள்ளிவாய்க்கால் நோக்கிய யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பாரிய உந்துருளிப் பேரணி ஆரம்பமாகியுள்ளது.

தமிழினப் படுகொலைகள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்பதற்காக யாழ். பல்கலையிலிருந்து பேரணியாக புறப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் உந்துருளி பேரணி முள்ளிவாய்க்காலை சென்றடைந்ததும், காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தில் பிரதான சுடர் ஏற்றப்படவுள்ளது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இன்றைய தினம் துக்க நாளாகவும், தமிழினப் படுகொலை நாளாகவும் வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது.

இந்நிகழ்வை நடத்துவதற்கான ஒழுங்கமைப்புகளில் வடக்கு மாகாண சபைக்கும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையில் நீடித்து வந்த இழுபறிகளுக்கு முடிவு காணப்பட்டு, அனைத்து தரப்புகளும் இணைந்து நினைவேந்தல் நிகழ்வை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)