Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: வட.மாகாணமெங்கும் சோகமயம்!

In இலங்கை
Updated: 03:54 GMT, May 18, 2018 | Published: 03:54 GMT, May 18, 2018 |
0 Comments
1231
This post was written by : Ravivarman

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக கிளிநொச்சியில் அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் முடங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி சேவைச்சந்தை உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், அரச அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் வழமைபோல் செயற்படுகின்றன.

அத்துடன், கிளிநொச்சி நகரெங்கும் கறுப்புக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், பிரதேசமெங்கும் சோக மயமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் நகரமெங்கும் கறுப்புக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு நினைவுதினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் மீனவர்கள் எவரும் கடலுக்குச் செல்லவில்லை என்பதுடன், வர்த்தகர்கள் அனைவரும் தமது வியாபார நிலையஙகளைப் பூட்டி இன்றைய நினைவுதினத்திற்கு ஆதரவளிக்குமாறு வர்த்தக சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)