Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க – வடகொரிய ஒப்பந்தம் இன்னும் சரியான பாதையில்தான் செல்கிறது: ட்ரம்ப் 

In
Updated: 03:47 GMT, May 18, 2018 | Published: 03:47 GMT, May 18, 2018 |
0 Comments
1096
This post was written by : Johnson paiva

அமெரிக்க – வடகொரிய ஒப்பந்தம் நடைபெறுவதற்கான சரியான பாதையில் தான் செல்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) NATO செயலாளர் General Jens Stoltenberg உடனான படமெடுக்கும் அமர்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் வடகொரியா அணுவாயுதங்களைக் கட்டாயமாகக் கைவிடவேண்டும் இல்லையென்றால் லிபியா விடயத்தில் அமெரிக்கா செயற்பட்டது போல செயற்படவேண்டி இருக்கும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பரிந்துரை செய்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க – வடகொரிய ஒப்பந்தம் குறித்து வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் நேற்று முன்தினம் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில் ட்ரம்ப் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் பேசுகையில், “தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  வடகொரியா அணுவாயுதங்களைக் கைவிடவேண்டுமென்று  பரிந்துரைத்தார்.  வடகொரியா ஆணுவாயுதங்களைக் கைவிடவேண்டுமெனக் கட்டாயப்படுத்தி அமெரிக்கா பின்தொடரவில்லை.  நடக்கவிருக்கும் ஒப்பந்தம் நடைபெற்றால் கிம் ஜொங் உன் இருப்பார், வடகொரியா மகிழ்ச்சியாகவும் வசதியான நாடாகவும் இருக்கும்” எனது தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “ஒப்பந்தம் நடைபெறாவிட்டால் லிபியா விடயம் போலவே வடகொரியாவையும் கையாள வேண்டி இருக்கும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)