Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தல்!

In இலங்கை
Updated: 04:25 GMT, May 18, 2018 | Published: 04:25 GMT, May 18, 2018 |
0 Comments
1046
This post was written by : Ravivarman

போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலையும், அவர்கள் பற்றிய தகவல்களையும் வெளியிடுமாறு இலங்கை அரசாங்கத்திடம், சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு தாம் பாதுகாப்புச் சபைக்கு உத்தரவிடுவதாக கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூன் மாதம், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

தேசிய பாதுகாப்புச் சபையின் தலைவராக இலங்கை ஜனாதிபதியே இருப்பதுடன், அவரே முப்படைகளினதும் தளபதியுமாவார். எனவே இவ்விடயத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியவரும் அவரே.

இருந்த போதும், அவர் வாக்குறுதி அளித்து 11 மாதங்களாகியும், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்தவர்களின் பட்டியல் இன்னமும் வெளியிடப்படவில்லை என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)