Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறுதி யுத்தத்தின் மௌன சாட்சியான நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி!

In இலங்கை
Updated: 04:09 GMT, May 18, 2018 | Published: 04:09 GMT, May 18, 2018 |
0 Comments
1031
This post was written by : Risha

உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள நந்திக்கடலில் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த உறவுகளுக்கு வட. மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இறுதி யுத்தத்தின் மௌன சாட்சியாக திகழும் நந்திக்கடல் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை அவர், அமைதியாக உறவுகளை நினைவுகூர்ந்தார்.

உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர், ”எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலித்தேன்.

அத்துடன், திட்டமிட்டபடி இன்று காலை வட. மாகாண சபையால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள உயிர்நீத்த எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் நடைபெறும்” என்றும் அவர் தெரிவித்தார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)