Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரேசில் அரசாங்கம் தீவிர நடவடிக்கை: 132 பேர் கைது

In உலகம்
Updated: 04:50 GMT, May 18, 2018 | Published: 04:50 GMT, May 18, 2018 |
0 Comments
1047
This post was written by : Johnson paiva

பிரேசிலில் இணையதளம் மூலமாக சிறுவர்கள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுவதற்கு எதிராகப் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு 132 பேரைக் கைது செய்துள்ளனர்.

குறித்த இந்த நடவடிக்கை மூலமாக நேற்று (வியாழக்கிழமை) நாடெங்கிலும் உள்ள 284 நகரங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமான ஆபாசப்படங்கள் மற்றும் புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த நடவடிக்கையில் 2600 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கைதுசெய்யப்பட்டவர்களின் கணினிகள் மற்றும் கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலமே ஆதாரங்கள் சிக்கியதாகவும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ராவுல் ஜங்க்மன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தக்குற்றம் புரிந்தவர்களுக்கு பிரேசில் சட்டத்தின் படி குறைந்தபட்சம் 4 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனவும் உலகில் பெருகிவரும் பாலியல் குற்றங்களுக்கு இந்த நடவடிக்கை நல்லதொரு தீர்வு தருமெனவும் கூறினார்.

இந்நிலையில் ஒக்டோபர் மாதம் பிரேசிலில் 112 பேர் குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)