Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்டாலினை பின்தள்ள முடியாது: சத்ருகன் சின்கா தெரிவிப்பு

In இந்தியா
Updated: 07:30 GMT, May 18, 2018 | Published: 05:46 GMT, May 18, 2018 |
0 Comments
1121
This post was written by : poovannan

தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்குள்ள ஸ்டாலினை மீறி ரஜினியாலும் கமலாலுல் அரசியல் செய்ய முடியாது என பீகார் மாநிலத்தின் பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியலுக்குள் நுழைவது தொடர்பாக கருத்துக் கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “தமிழகத்தில் ஸ்டாலினுக்கு மக்களுக்கு இருக்கின்ற செல்வாக்கினை மீறி ரஜனி மற்றும் கமல் ஆகியோரால் அரசியல்செய்ய முடியாது. ரஜினியும் கமலும் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் என்னிடம் அறிவுரை கேட்டிருந்தால், அரசியலுக்கு வராதீர்கள் எனக் கூறியிருப்பேன்.

அவர்கள் என் நண்பர்களாக இருந்தபோதும், தெளிவுடன்தான் அரசியலில் ஈடுபட்டிருப்பார்கள் என நினைக்கின்றேன். அரசியலில் இருக்கும் ஆபத்துக்கள் குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கியிருப்பேன்” எனத் தெரிவித்தார்.

பாரதீய ஜனதா கட்சியை ஆதரிக்காது, தனிக் கட்சியுடன் ரஜினியை அரசியலுக்கு வருமாறு இந்த சத்ருகன் சின்ஹா என்பவர் கடந்த காலங்களில் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)