Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை: வட. மாகாண சபையால் சர்ச்சை

In இலங்கை
Updated: 05:15 GMT, May 18, 2018 | Published: 05:15 GMT, May 18, 2018 |
0 Comments
1331
This post was written by : Risha

வட. மாகாண பாடசாலைகளில் மாகாண சபை கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், மாகாண சபையில் முழுக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளமை, சபையின் செயற்பாட்டின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம், வடமாகாண சபை உறுப்பினர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வெறும் அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்துகின்றனரா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

உரிமைகளை வென்றெடுப்பதற்கான வேள்வியில் ஆகுதியானவர்களை உணர்வுடன் நினைவுகூர வேண்டியது எம்மினத்தின் கடமையாகும் எனத் தெரிவித்த வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்திலும் மாகாண சபை கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால், அவரது அறிவுறுத்தல் வடமாகாண சபையிலேயே நடைமுறைப்படுத்தப்படாமை அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை மாத்திரமன்றி, சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)