Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக பதினொருவர் அணியிலிருந்து அதிரடி வீரர் விலகல்!

In கிாிக்கட்
Updated: 05:23 GMT, May 18, 2018 | Published: 05:23 GMT, May 18, 2018 |
0 Comments
1026
This post was written by : Anojkiyan

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான உலக பதினொருவர் அணியிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான சயிட் அப்ரிடி விலகியுள்ளார்.

மேலும் மூன்று வார காலங்களுக்கு ஓய்வு தேவை என்பதால் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான சஹிப் அல் ஹசன், இத்தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியிருந்தார்.

இந்நிலையில் அப்ரிடியும் இத்தொடரிலிருந்து விலகியிருப்பது உலக பதினொருவர் அணிக்கு கடும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் கரீபியன் தீவுகளை தாக்கிய இர்மா மற்றும் மரியா புயல் காரணமாக அங்குள்ள 5 முக்கிய கிரிக்கெட் மைதானங்கள் பாரியளவில் சேதங்களுக்கு உள்ளாகின.

இந்நிலையில், இந்த மைதானங்களை புனரமைப்பு செய்வதற்காகவும் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி கொடுப்பதற்காகவும் நிதியினை திரட்ட மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், உலக பதினொருவர் அணிக்கு இடையில் ரி-20 போட்டியயொன்று எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)