Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் அண்டனியுடன் இணையும் அர்ஜூன்!

In சினிமா
Updated: 05:29 GMT, May 18, 2018 | Published: 05:29 GMT, May 18, 2018 |
0 Comments
1027
This post was written by : Vithushagan

நடிகர் அர்ஜூன்  விஜய் அண்டனியுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிப்பில் உருவாகியுள்ள ‘காளி’ படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகைகள் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

‘காளி’ படத்தை அடுத்து விஜய் ஆண்டனி ‘திமிரு பிடிச்சவன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை கணேசா என்பவர் இயக்கவுள்ளார்.

இதையடுத்து ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில், நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் வெளியாகியுள்ள ‘இரும்புத்திரை’ படத்தில் நடிகர் அர்ஜூன் வில்லனாக நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் அர்ஜூன் மீண்டும் வில்லன் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை அடுத்து நவீன் இயக்கத்தில் ‘திருடன்’ என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)