Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னை விமான நிலையத்தில் சட்டவிரோதமான தங்க நகைகள் மீட்பு

In இந்தியா
Updated: 06:45 GMT, May 18, 2018 | Published: 06:28 GMT, May 18, 2018 |
0 Comments
1054
This post was written by : poovannan

கனடாவிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 13.5 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சென்னை – மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு கனடாவிலிருந்து வந்த பயணிகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தீவிரமாக சோதனைசெய்தனர்.

அவ்வேளை, கிருஷ்ணகாந்தன் (வயது 69) என்ற கனடாவைச் சேர்ந்தவரது பயணப் பையைச் சோதனை செய்தபோது, இரகசியமான முறையில் தங்க சங்கிலிகள், தங்க வளையல்கள் மற்றும் டாலர்களை ஆகியவை மறைத்துவைக்கப்பட்டுள்ளதை சுங்கப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.

அவரிடமிருந்த மேற்படி 430 கிராம் தங்க நகைகளை விமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியதுடன், இது தொடர்பாக குறித்த கனடா பிரஜையிடம் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதேவேளை சென்னையிலிருந்து இலங்கைக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணிக்க இருந்த முகமது சலீம் (வயது 45) என்பவரை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர், சவுதி ரியால் மற்றும் அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்திருந்தமையைக் கண்டுபிடித்தனர்.

சென்னையைச் சேர்ந்த குறித்த பயணியிடமிருந்து சுமார் 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், அப்பிரயாணியின் விமான பயணத்தை நிறுத்திய சுங்கத் திணைக்கள அதிகாரிகள், விசாரணையை முன்னெடுத்துவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)