Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

In கிாிக்கட்
Updated: 06:11 GMT, May 18, 2018 | Published: 06:11 GMT, May 18, 2018 |
0 Comments
1475
This post was written by : Anojkiyan

உபாதையால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் உடற் தகுதிபெற்றுவிட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இவர்கள் இருவரும், எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இத்தொடருக்கான 17 பேர் கொண்ட அணியில், இருவரும் இடம்பெற்றிருந்த போதும் அவர்கள் உடற்தகுதி சோதனைக்கு பின்னரே அணிக்கு உத்தியோகபூர்வமாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடத்தப்பட்ட உடற்தகுதி சோதனையில் அவர்கள் தங்களது உடற்தகுதிய நிரூபித்துள்ள நிலையில், அவர்கள் அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

எனினும், கைவிரல் உபாதைக்குள்ளான அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன அணியில் இடம்பெறமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இத்தொடரின் பார்படோஸ் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளது. இதுவரை மேற்கிந்திய தீவுகள் மண்ணில், இலங்கை அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)