Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரையாகிப்போனது தமிழர் தாயகம்! – கதறும் தமிழர்களிடையே ஓங்கி ஒலித்த சி.வியின் குரல்

In இலங்கை
Updated: 06:49 GMT, May 18, 2018 | Published: 06:49 GMT, May 18, 2018 |
0 Comments
1958
This post was written by : Ravivarman

தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புத் தொடர்பான சர்வதேசப் பொறிமுறை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தொடர்ந்தும் தமிழர்களின் தாயகப்பகுதிகள் சிங்கள மயமாகும் நிலைமை ஏற்பட்டு வருகின்றது. திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்களும் இராணுவ மயமாகும் தமிழர் தாயகப் பூமியும் இதற்கு இரையாகிப் போகின்றன.

போருக்குப் பின்னரான மக்களுக்கான அபிவிருத்திப் பணிகள் கட்டமைக்கப்பட்ட முறையினூடாக வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் மக்களுக்கென கிடைக்கும் அபிவிருத்தி நிதிகள் அனைத்தும் இராணுவத்தினரின் செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

சாட்சிகள் இல்லாப் போரினை நிகழ்த்தி எமது அப்பாவி மக்கள் பலர் கொலை செய்யப்பட்டார்கள். இந்தப் போருக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் மனிதநேயப் பணியாளர்கள் எவருமே உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

சாட்சியங்கள் இல்லாத நிலையில் அல்லது சாட்சியங்களை உள்விடாத நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொய்யான பரப்புரைகள் மூலம் சர்வதேச சமூகம் இலங்கை அரசினால் தவறாக வழிநடத்தப்பட்டது.

இவ்வாறான பொய்யும் புரட்டுமே இங்கு நடந்த இன அழிப்பை சர்வதேச சமூகம் தடுக்க முடியாமல் போனமைக்கு ஒரு காரணம். பொய்யையும் புரட்டையும் ஆயுதங்களாகக் கொண்டு ஒரு நாடு நீண்ட தூரம் பிரயாணம் செய்ய முடியாது.

நடந்தது இனப்படுகொலை தான் என்பதற்கான ஏராளமான ஆதாரங்களும், சாட்சிகளும் இன்று சர்வதேச சமூகம் முன்பாக வைக்கப்பட்டுள்ளன. என்றோ ஒரு நாள் சர்வதேச சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும்.

இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொறுமை காத்து நிற்கின்றனர். ஆனால் இன்று 9 வருடங்கள் கடந்துபோயுள்ள நிலையிலும் எமக்கான நீதி கிடைத்தபாடில்லை.

இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களது வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதற்கான பணிகளை அரசாங்கம் இன்னமும் முழுமையாக முன்னெடுக்கவில்லை.

அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்பினைப் பெற்றுக் கொள்வதற்குச் சர்வதேசம் எமக்கு உதவவேண்டும். இதற்கு நாம் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகச் செயற்பட வேண்டும்.

நாம் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து எமது மக்களுக்கான நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு செயற்படவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)