Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸ் காவலில் உயிரிழந்தவரின் மனைவிக்கு நிவாரணம்

In இந்தியா
Updated: 07:34 GMT, May 18, 2018 | Published: 07:32 GMT, May 18, 2018 |
0 Comments
1037
This post was written by : poovannan

கேரளாவில் பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த வாலிபரின் மனைவிக்கு மாநில அரசினால் அரசாங்க வேலையும் 10 இலட்சம் ரூபாய் நிதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேரளா – கொச்சி அருகேயுள்ள பரவூர் வராப்புழா பகுதியைச் சேர்ந்த அகிலா (வயது 26) என்பவருக்கே இவ்வாறு நிவாரணம் வழங்கப்பட்டது. இந்நிவாரணத்தை எர்ணாகுளம் கலெக்டர் முகமது சபீருல்லா வழங்கியிருந்தார்.

அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரியை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் இவரது கணவரான ஸ்ரீஜித் என்பவரை வராப்புழா பொலிஸார் கைதுசெய்திருந்தனர். பொலிஸாரின் காவலில் விசாரணை நடந்துகொண்டிருந்தபோது அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காது ஸ்ரீஜித் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து விசாரணையின்போது அடித்துக் கொன்று விட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் செய்தனர். மேலும், பொலிஸாரைக் கண்டித்து எதிர்க் கட்சியினர் போராட்டமும் நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து கேரள அரசு இது குறித்து உயர் மட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, பொலிஸ் காவலில் ஸ்ரீஜித் உயிரிழந்தமையால், அவரின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் கேரள அரசு செய்யும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)