Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.நா.வின் கொள்கைகளை கடைப்பிடித்தால் இலங்கை படையினருக்கு அமைதிப்படையில் வாய்ப்பு

In இலங்கை
Updated: 06:48 GMT, May 18, 2018 | Published: 06:47 GMT, May 18, 2018 |
0 Comments
1047
This post was written by : Varatharajan Yuganthini

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் இலங்கை  படையினர் அங்கம் வகிக்க வேண்டுமென்றால்  ஐக்கிய நாடுகளின் கொள்கைகளை இலங்கை அரசாங்கம் பின்பற்ற வேண்டுமென, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிப்பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் இலங்கை படையினர் அங்கம் வகிப்பது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்து கூறுகையில்,

“இலங்கை படையினரை அமைதிப்படையில் இணைத்துக்கொள்வதற்கு முன்னர்  அவர்களது  கடந்த காலங்கள்  தொடர்பில் விசாரணை செய்யும்போது  ஐ.நா.கொள்கைகளை பின்பற்ற வேண்டும் .

இவ்வாறு ஐ.நா.வின் கொள்கைகளை இலங்கை அரசாங்கம் பின்பற்றுகின்றதா என்பதை  உறுதி செய்து கொள்வதற்காகவே இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுகின்றோம்.

மேலும் லெபனானில் பணியாற்றும் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் இடம்பெறவுள்ள 49 இலங்கை படையினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.

இதனைத் தொடர்ந்து  அமைதிப்படையில் இணைத்துக்கொள்ளவுள்ள ஏனைய 101 படையினரின் கடந்த காலங்கள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆராய்ந்து வருகின்றது.

இதனால் அமைதிப்படையில் இலங்கை படையினர் அங்கம் வகிக்க வேண்டுமென்றால்  ஐ.நா.வின் கொள்கை விதிமுறைகளை பின்பற்றுவது அவசியமெனவும் பர்ஹான் ஹக் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)