Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

In இலங்கை
Updated: 06:44 GMT, May 18, 2018 | Published: 06:44 GMT, May 18, 2018 |
0 Comments
1051
This post was written by : Ravivarman

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு ஆத்ம சாந்திக்காக சர்வமத பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.

இதனைத்தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம்பெற்றதுடன், குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மன்னார் நகர சபையின் தலைவர்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் உறவுகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவுகூரும் வகையில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள அதிகளவான வர்த்தக நிலையங்கள் காலை முதல் மதியம் வரை மூடி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூர்ந்துள்ளனர்.

அத்துடன், பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு குறைவாக காணப்பட்டதோடு, மக்களின் நடமாட்டமும் குறைவடைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)