Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு!

In இலங்கை
Updated: 07:10 GMT, May 18, 2018 | Published: 07:10 GMT, May 18, 2018 |
0 Comments
1482
This post was written by : Ravivarman

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் உட்பட பொது அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், தமிழின உணர்வாளர் தமிழ்நேசன், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் எஸ்.வசந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் வா.கிருஸ்ணகுமார், செயலாளர் எஸ்.நிலாந்தன் உட்பட பெருமளமான பொதுமக்கள், மதகுருமார்கள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் வட.கிழக்கில் உயிர்நீர்த்த உறவுகளுக்காக இரண்டு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையினை வலியுறுத்தும் வகையிலான உரைகளும் நடைபெற்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)