Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருளாதாரத்திற்கு வலுவூட்டும் புதிய திட்டம் விரைவில்!- பிரதமர் அறிவிப்பு

In இலங்கை
Updated: 07:37 GMT, May 18, 2018 | Published: 07:37 GMT, May 18, 2018 |
0 Comments
1062
This post was written by : Risha

கிராமியப் பொருளாதாரத்தை வலுவூட்டும், சந்தையை இலக்காகக் கொண்ட பால் உற்பத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற பால் உற்பத்தி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, பிரதமர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் அமெரிக்க விவசாய அமைச்சின் துணையுடன், 2 பில்லியன் ரூபா நிதியுதவியைக் கொண்ட பால் உற்பத்தித் திட்டம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தத்திட்டத்திற்கு ‘சந்தையை இலக்காகக் கொண்ட பால் உற்பத்தித் திட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற இந்த அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த திட்டத்தின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பண்ணை விவசாயிகளுக்கு போதிய வசதிகளை வழங்கி, புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தப் போவதாக கூறினார்.

அத்துடன், பால் உற்பத்தியை இரு மடங்காக அதிகரித்து பண்ணை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டத்தினையும் வகுத்துள்ளதாக தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையிலான தொடர்புகள் சுதந்திர காலத்திற்கு முற்பட்டவை என்று சுட்டிக்காட்டிய பிரதமர், அதனை தொடர்ந்தும் சிறப்பாக பேணி வருவதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கை அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேஷாப், சுமார் 200 கோடி ரூபா ரூபா செலவில், 15 ஆயிரம் பண்ணை விவசாயிகளை இலக்காகக் கொண்டு இந்த புதிய பால் உற்பத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதன் மூலம் பால் பண்ணைத் தொழிலில் செயற்றிறனை அதிகரிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்ட தூதுவர், இதன் மூலம் பால் பண்ணையாளர்களின் வாழ்க்தை தரத்தை உயர்த்தலாம் என்றும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)