Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை தமிழர்களுக்காக சமூக வளைத்தளங்களில் போராட அழைப்பு விடுத்த சீமான்!

In இந்தியா
Updated: 08:22 GMT, May 18, 2018 | Published: 08:22 GMT, May 18, 2018 |
0 Comments
1042
This post was written by : Varatharajan Yuganthini

இலங்கை தமிழர்களுக்காக சமூக வளைத்தளங்களில் போராட தமிழக இளைஞர்கள் முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு பொது வாக்கெடுப்பு மிகவும் அவசியமாகும்.

அதற்கு தமிழக இளைஞர்கள் சமூக வளைத்தளங்களின் ஊடாகவே அவர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு போராட முன்வர வேண்டும்.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசத்தின் உதவியோடு கடந்த 2009 ஆம் ஆண்டு அழித்து முடிவுக்கு கொண்டு வந்தது.

இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் உலகிலுள்ள அனைத்து தமிழரின் ஆழ்மனதிலும் வடுக்கலாக காணப்படுகின்றது.

இன்றைய நாள் தான் இலட்சக்கணக்காண தமிழர்கள் தாயகத்தின் விடுதலைக்காக உயிர்நீத்தார்கள். 9 ஆண்டுகள் கடந்தாலும் அதனால் ஏற்பட்ட தோல்வி எம்மை வருத்திக்கொண்டுதான் உள்ளது.

இதனால் தாய் மண்ணிற்காக உதிரத்தை சிந்திய இந்நாளை தமிழர்களின் வீழ்ச்சிக்குரிய நாளாக அல்லாது விடுதலையெழுச்சிக்குரிய நாளாக கருதி அனைவரும் போராட முன்வர வேண்டும்” எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)