Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குட்கா விவகாரத்தில் தொடர் விசாரணைக்கு தடையில்லை: மேல் நீதிமன்றம் உத்தரவு

In இந்தியா
Updated: 09:47 GMT, May 18, 2018 | Published: 09:46 GMT, May 18, 2018 |
0 Comments
1064
This post was written by : poovannan

குட்கா விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றமைக்கு திராவிட முன்னேற்ற கழகமானது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. அதற்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் குற்றப் புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தனர்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த சிவக்குமார் என்பவர், மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை விசாரித்த மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலி நாரிமன் மற்றும் கவில்ன்கர் ஆகியோரே இவ்வாறு அம்மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் தடை செய்யப்பட்ட குட்கா நிறுவனம் மூலம் இலாபம் பெற்றதாகவும் அது தொடர்பான வழக்கை குற்றப் புலனாய்வின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் திராவிட முன்னேற்ற கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)