Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொட்டும் மழையில் குளிர்பானம் – கதறும் மக்களிடையே கொண்டாட்டத்தில் இராணுவம்!

In இலங்கை
Updated: 09:57 GMT, May 18, 2018 | Published: 09:57 GMT, May 18, 2018 |
0 Comments
1191
This post was written by : Ravivarman

இலங்கை யுத்த வெற்றியைக் கொண்டாடும் முகமாக இராணுவத்தினர் மேற்கொண்ட வெற்றிக் கொண்டாட்டங்கள் முள்ளிவாய்க்கால் மக்களிடையே கடும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்காலில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு வலிகளுடனும் வேதனையுடனும் திரும்பிக் கொண்டிருந்த மக்களுக்கு மழைக்கு மத்தியில் இராணுவத்தினர் குளிர்பானங்கள் வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

இராணுவத்தினரின் குறித்த செயற்பாடுகள் உறவுகளை இழந்து தவிக்கும் மக்களான தமக்கு வேதனையளிப்பதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இராணுவத்தினரின் இச்செயற்பாடுகள் இராணுவத்தினரின் வெற்றியைக் குறிப்பிடும் தோற்றப்பாட்டினை ஏற்படுத்துவதாகவும், நினைவேந்தல் நிகழ்வினைக் கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்பது ஆண்டுகளைக் கடந்த பின்னரும் தமது கண்முன்னே உறவுகள் செத்து மடிந்த கோர நினைவுகனைச் சுமந்து நிற்கும் எம் உறவுகளுக்கு இராணுவத்தினது இச்செயற்பாடுகள் மேலும் உணர்வுகளைச் சீண்டுவதாகவே அமையும் எனக் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமிழ் மக்களிடையே நல்லுணர்விளை ஏற்படுத்திக் கொண்டு, அம்மக்களிடையே உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே இராணுவத்தினர் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

எவ்வாறாயினும் முன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டு வந்த பின்னரும் தமிழ் பிரதேசங்களில் தொடரும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் இராணுவத்தினரை மையப்படுத்தியே நகர்ந்து வருவதன் காரணமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்தியில் இராணுவத்தினகொர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் செயற்பாடுகள் அம்மக்களுக்கு வேதனையையும், உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)