Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாமல் மீதான தடை நீக்கம்

In இலங்கை
Updated: 10:52 GMT, May 18, 2018 | Published: 10:52 GMT, May 18, 2018 |
0 Comments
1030
This post was written by : Jeyachandran Vithushan

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) நீக்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தில் றக்பி விளையாட்டிற்காக இந்திய நிறுவனம் வழங்கிய 70 பில்லியன் ரூபாயினை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமையால் இவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு விசாரணையானது கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாமல் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் அவருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை ஆராய்ந்த நீதிபதி அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டார்.

மேலும், குறித்த மோசடி வழக்கு தொடர்பிலான அறிக்கைகளை நிதி மோசடி விசாரணைப்பிரிவினர் சட்டமா அதிபரிடம் வழங்கியிருந்தனர். இருப்பினும் இது குறித்த ஆலோசனை சட்டமா அதிபரிடம் இருந்து கிடைக்கவில்லை என தெரிவித்ததை அடுத்து, குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாமல் ராஜபக்ஷ ரஷ்யா செல்வதற்காக விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)