Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட. மாகாணத்தில் முழுக்கம்பத்தில் பறந்த கொடி: சர்ச்சைக்கு முடிவு

In இலங்கை
Updated: 13:37 GMT, May 18, 2018 | Published: 13:37 GMT, May 18, 2018 |
0 Comments
1171
This post was written by : Jeyachandran Vithushan

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு வடமாகாண சபையின் கொடி அலுவலக நேரத்திற்கு பின்னர் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டு , துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண பேரவை செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.15 மணியளவில் வடமாகாண கொடி முழுக்கம்பத்தில் பறந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த செய்தி தொடர்பில் வடமாகாண அவைத்தலைவர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.  அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ,

வடமாகாண பேரவை செயலக அலுவலக நேரம் காலை 8.30 மணிக்கே. அதனாலயே காலையில் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்க விட முடியவில்லை.

அலுவலக நேரத்திற்கு அலுவலக உத்தியோகஸ்தர்கள் வந்த பின்னர் காலை 8.30 மணிக்கு மாகாண கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு, துக்க தினமும் அனுஸ்டிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)