Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டுவில். இடம்பெற்ற கூட்டமைப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

In இலங்கை
Updated: 14:25 GMT, May 18, 2018 | Published: 14:18 GMT, May 18, 2018 |
0 Comments
1108
This post was written by : Jeyachandran Vithushan

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) வடகிழக்கில் பல்வேறு இடங்களில் எழுச்சிபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கிரான் ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் மிக எழுச்சிபூர்வமாகவும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதித் தலைவர்கள், உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பக்தி பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வில் ஆரம்பத்தில் கூட்டுப் பிரார்த்தனை, அஞ்சலி ஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து விசேட பூசை இடம்பெற்றது. பூசையின் முடிவில் அஞ்சலிச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த அனைத்து உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டியும், தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு வேண்டியும் இறைவணக்கம் செலுத்தப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)