Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமானது: மஹிந்த

In இலங்கை
Updated: 09:54 GMT, May 20, 2018 | Published: 09:54 GMT, May 20, 2018 |
0 Comments
1048
This post was written by : Ravivarman

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் தற்காலிகமானவை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பல்வேறுபட்ட கருத்துக்களும், பல வாதங்களும் காணப்படுகின்றன. இவை அனைத்தும் தற்காலிகமானவை. விரைவில் அவை அனைத்தும் இல்லாமற் போய்விடும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் ஜனநாயக நிலைமையால் விரைவில் இக்கருத்து முரண்பாடுகள் அனைத்தும் நீங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஒன்றுபடுவார்கள்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரே தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார். மக்கள் அவர்மீது வைத்துள்ள நம்பிக்கையை ஜனாதிபதி காப்பாற்றுவார்” என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg