Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்

In இலங்கை
Updated: 13:20 GMT, May 20, 2018 | Published: 13:20 GMT, May 20, 2018 |
0 Comments
1416
This post was written by : Ravivarman

நாவிதன்வெளி பிரதேசத்தை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாற்றியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான தவராசா கலையரசன் தெரிவித்தார்.

படர்கல் பத்தினியம்மன் ஆலய வரவேற்பு கோபுரத்திறப்பு விழா நாவிதன்வெளி மத்தியமுகாம் 06 பகுதியில் ஆலய தலைவர் மார்கண்டு தலைமையில் நேற்று (சனிக்கிழமை) மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த பிரதேசசபை தவிசாளர், “கிழக்கிலங்கையின் தமிழர்களின் எல்லைகளை அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்தமைக்கு பலமான தொன்மையை எடுத்தியம்பும் ஆலயங்களின் கோபுரங்கள் மிளிராமையே காரணமாகும்.

தமிழர்கள் மாற்று சமூகத்தை ஒப்பிடுகையில் அனைத்து விடயத்திலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாவிதன்வெளி பிரதேசத்தில் 2006 இல் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னரே பிரதேசத்தில் அபிவிருத்தியும் கொங்றீட், தார் வீதிகளும் அமைக்கப்பட்ட விடயம் யாவரும் அறிந்ததே.

மத்தியமுகாம் பகுதியை நாவிதன்வெளி பிரதேசத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாற்றியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அதனை மிகவிரைவில் செயற்படுத்துவதற்கு சகலவிதமான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது இந்த செயற்பாடுகள் அனைத்தும் எமது மக்களின் நலன்சார்ந்ததாகவே அமையும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg