Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நேர்மையற்ற கூட்டணி நீடிக்காது – அமித் ஷா ஆரூடம்

In இந்தியா
Updated: 12:19 GMT, May 20, 2018 | Published: 12:19 GMT, May 20, 2018 |
0 Comments
1063
This post was written by : Litharsan

கார்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் அமைத்துள்ள கூட்டணி நேர்மையற்றது எனவும், அது நீடிக்காது எனவும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் பா.ஜ.க வென்றபோதும் பெரும்பான்மை கிடைக்காது பா.ஜ.க.வின் ஆட்சி பறிபோனது. இந்நிலையில் இது குறித்து அமித் ஷா கருத்து வெளியிட்டிருந்தார்.

அதன்போது கர்நாடகாவில் தற்பொது இணைந்துள்ள கூட்டணி ஸ்திரமற்றது. அந்த கூட்டணி நிலைத்திருக்காது என்று தெரிவித்தார்.

மேலும் ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க. குதிரை பேரம் நடத்தியதாக வெளியான தகவல்களை முற்றிலும் மறுத்த அமித் ஷா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற தொகுதிகளை விட அதிக தொகுதிகளை அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கைப்பற்றும்” என்று தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg