Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பட்டாசு களஞ்சியசாலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 13:02 GMT, May 20, 2018 | Published: 13:02 GMT, May 20, 2018 |
0 Comments
1054
This post was written by : Litharsan

திண்டுக்கல் அருகே பட்டாசு களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் சுக்காம்பட்டிப் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் களஞ்சிய சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது திடீரென்று களஞ்சிய சாலைக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கரமாக வெடித்து சிதறியது. அதில் ஒருவர் உயிரிழந்ததோடு குறித்த களஞ்சியசாலையும் இடிந்து தரைமட்டமாகியது.

இன்று விடுமுறை தினமாகையால் தொழிலாளர்கள் சென்றிருக்கவில்லை. எனினும் ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த பொன்னுதாய் என்பவர் நேற்று வேலை முடிந்து செல்லும்போது தனது கைத்தொலைபேசியை களஞ்சியசாலைக்குள் மறந்து விட்டுச்சென்றுள்ளார். எனவே அதனை எடுப்பதற்காக அங்கு சென்றவேளையே இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg