Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

In இலங்கை
Updated: 15:11 GMT, May 20, 2018 | Published: 15:11 GMT, May 20, 2018 |
0 Comments
1061
This post was written by : Litharsan

மட்டக்களப்பு, மண்டூர் மூங்கில் ஆற்றில் நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மண்டூர் கணேசபுரத்தைச் சேர்ந்த உமாபதி கிசான் (வயத 15) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

6 நண்பர்களுடன் மூங்கில் ஆற்றிற்குச் சென்று நீராடி விளையாடியபோது நீரில் மூழ்கி சிறுவன் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக குறித்த சிறுவனின் உறவினர்களுக்கு தெரியப்படுத்திய போது பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் தேடியபோது ஆற்றில் உள்ள முங்கில் மரத்துக்குள் சிக்குண்ட நிலையல் சடலமாக மீட்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg