Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

In இலங்கை
Updated: 10:17 GMT, May 21, 2018 | Published: 10:17 GMT, May 21, 2018 |
0 Comments
1134
This post was written by : Varshini

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள கிணறு மாசடைந்துள்ள நிலையில், அதனை புனரமைப்புச் செய்வதற்கு யாழ். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையின் பங்களிப்புடன் குறித்த கிணற்றினை புனரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், பிரதேச பிரதேச செயலாளர் பொன்னம்பலம் தயானந்தன் தலைமையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் பங்குபற்றுதலுடனும் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் நடைபெற்றது.

இதன்போது, குறித்த கிணற்றுப் பகுதியில் கழிவுகளை போடுவதால், குடிநீர் மாசடைகின்றதென்றும், அந்த கிணற்றினை பாவனைக்குட்படுத்தும் வகையில் புனரமைப்புச் செய்ய வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் பிரகாரம் கிணற்றை புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும், யாழ்.பிரதேச அபிவிருத்திகள் தொடர்பில் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த 2017ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படாமல் காணப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. முக்கியமாக வீட்டுத்திட்டங்கள், மலசலகூடம், வீதிப் போக்குவரத்து உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg