Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார்: ஜெயக்குமார்

In இந்தியா
Updated: 11:14 GMT, May 21, 2018 | Published: 11:13 GMT, May 21, 2018 |
0 Comments
1044
This post was written by : Kemasiya

தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிப்பதாக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாடியுள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பில் ஸ்டாலின் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடத்தவுள்ள நிலையில், அது குறித்து இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்து ஸ்டாலின் செயற்படுவதாகவும் கூறினார்.

அத்துடன் தொடர்ச்சியாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி வருவதானது, அவர் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார் என்பதையே எடுத்து காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் ஸ்டாலின் வெற்றறிக்கைகளை வெளியிடுவதாகவும், அதனை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg