Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெருக்கடியில் கிளிநொச்சி இளைஞர்கள்: முருகேசு சந்திரகுமார் ஆதங்கம்

In இலங்கை
Updated: 11:21 GMT, May 21, 2018 | Published: 11:21 GMT, May 21, 2018 |
0 Comments
1069
This post was written by : Varshini

கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் வேலையின்றி அல்லலுறுவதாக தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், அவ்வாறான நிலையில் விலைவாசி அதிகரித்துள்ளமையானது அவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள், பால்மா, எரிவாயு என்பவற்றின் விலைகளை அரசாங்கம் அடுத்தடுத்து அதிகரித்துள்ள நிலையில், கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொழில்வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்காமல் இவ்வாறு விலைகளை மாத்திரம் அதிகரித்துள்ளதால், மக்கள் தமது அன்றாட ஜீவனோபாயத்திற்கே அல்லலுறுவதாக முருகேசு சந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் 50 ரூபாவாக இருந்த அரிசி, தற்போது 110 ரூபாவாக உள்ளதென சுட்டிக்காட்டிய சந்திரகுமார், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் கடந்த அரசாங்கங்களை விமர்சிப்பதே வேலையாக கொண்டுள்ளதென குற்றஞ்சாட்டினார். எது எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியதே உண்மையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg