Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திரிபுராவில் கடும் மழை: வெள்ளத்தால் இடம் பெயர்ந்த மக்கள்

In இந்தியா
Updated: 11:41 GMT, May 21, 2018 | Published: 11:41 GMT, May 21, 2018 |
0 Comments
1057
This post was written by : Kemasiya

திரிபுரா மாநிலம் சந்திராபூர் பகுதியில் பெய்த, கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் சுமார் 650 குடும்பங்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது.

இதனால் சந்திராபூர் பகுதியில் உள்ள பல கிராமங்கள் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளப் பெருக்கு காரணமாக ஹொரா மற்றும் கோமதி ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு வெறும் பருப்பு அவித்து உணவாக வழங்கப்பட்டுள்ளதை ஊடகமொன்று காணொளி மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg