Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களை வௌியேறுமாறு அறிவித்தல்

In இலங்கை
Updated: 14:25 GMT, May 21, 2018 | Published: 14:25 GMT, May 21, 2018 |
0 Comments
3080
This post was written by : Jeyachandran Vithushan

களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் கங்கையின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்களை வௌியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது.

நாட்டில் தொடர்ந்து சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாகவே இந்த நிலை என தெரிவித்துள்ள அந்நிலையில், குறித்த பகுதியில் இருந்து வெளியேறும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளது.

மேலும், களு கங்கை, கிங், நில்வல கங்கை, அத்தனகலு மற்றும் மாஓயா ஆகிய நீர்நிலைகளில் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவற்றுக்கு அருகில் உள்ள மக்கள் வெள்ளப்பெருக்கு தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமை மையம் அறிவுறுத்தியுள்ளது.

அதுமட்டுமன்றி தற்போது, விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர் நிரம்பி வழிவதாகவும் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகளும் லக்‌ஷபான நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg