Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கரைச்சிப்பிரதேசத்தில் 964 குடும்பங்களுக்கு வீடுகள் அவசியம்!

In இலங்கை
Updated: 15:21 GMT, May 21, 2018 | Published: 15:21 GMT, May 21, 2018 |
0 Comments
1065
This post was written by : Vithushagan

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேசத்தில் சுமார் எண்ணாயிரத்து 964 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவைகள் கானப்படுவதாக கரைச்சிப்பிரதேச செயலர் ரீ.முகந்தன்   தெரிவித்துள்ளார்.

கரைச்சி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்துத்தெரிவித்த கரைச்சிப்பிரதேச செயலர் ரி.முகுந்தன்  , கரைச்சிப்பிரதேசத்தில் மீள்குடியேறிய 24ஆயிரத்து 601 குடும்பங்களில் 14 ஆயிரத்து 637 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது எண்ணாயிரத்து 964 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்கவேண்டியுள்ளதுடன், பகுதியளவில் சேதமடைந்த 275 வீடுகளை புனரமைத்துக்கொடுக்கவேண்டிய தேவைகாணப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டில் 442 நிரந்தர வீடுகள் வழங்கப்படடிருக்கின்றன.

பகுதிச்சேதமடைந்த 20 வீடுகள் புனரமைக்கப்பட்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் 193 வீடுகளுக்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த வீட்டுத்திட்டமானது மூன்றாண்டுத்திட்டம் என்பதனால் பகுதி பகுதியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த வீடுகள் புதிய வகைக்கல்லைக்கொண்டு அமைக்கப்பதாகத்தெரிவிக்கப்பட்டாலும் அதனை மக்கள் பெரிதாக விரும்பவில்லை. தற்போது ஒரு வீடு மாத்திரம் அமைக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் அதைப்பார்வையிட்டு ஏனைய வீடுகளை அமைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அதனால் அதன் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg